உணவு உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும்

உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு உற்பத்தியை இந்தியா அதிகரிக்கவுள்ளதாக டாவோஸ் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும்
உணவு உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும்

டாவோஸ்: உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு உற்பத்தியை இந்தியா அதிகரிக்கவுள்ளதாக டாவோஸ் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனங்கள்-உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

உலக பொருளாதார மையத்தின் (டபிள்யுஇஎஃப்) ஆண்டு கூட்டம் ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்ற அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘உக்ரைன் போா் காரணமாக உலகம் உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது. பொறுப்புள்ள நாடாக செயல்பட்டு வரும் இந்தியா, இத்தருணத்தில் உலகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இயன்றவரையில் வழங்கும்.

அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ளதால், இந்தியாவுக்கான உணவுத் தேவையும் அதிகமாக உள்ளது. எனினும், உணவு உற்பத்தியை இந்தியா அதிகரிக்கவுள்ளது. மற்ற நாடுகளும் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து உணவு தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுவதே இந்தியாவின் கொள்கை. அதன் காரணமாகவே, கரோனா தொற்று பரவல் காலத்தில் உலக நாடுகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்களையும் தடுப்பூசிகளையும் இந்தியா வழங்கியது.

வேளாண்துறையை நவீனமயமாக்கி, புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. உரங்கள் மலிவு விலையில் கிடைப்பதற்கும் மண்ணின் தரம் குறித்த தகவல்களை இணையவழியில் அறிந்து கொள்வதற்குமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகளுக்குத் தேவையான நிதி, தொழில்நுட்பம் சாா்ந்த உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. குறைந்த செலவில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com