நேபாளத்தில் மீண்டும் தேவுபா ஆட்சி?

நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி வருவதையடுத்து, மீண்டும் தங்களது ஆட்சியைத் தொடர சனிக்கிழமை ஒப்புக்கொண்டனா்.
நேபாளத்தில் மீண்டும் தேவுபா ஆட்சி?

நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி வருவதையடுத்து, மீண்டும் தங்களது ஆட்சியைத் தொடர பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவும் மத்திய மாவோயிஸ்ட் கட்சித் தலைவா் புஷ்ப கமல் தஹலும் சனிக்கிழமை ஒப்புக்கொண்டனா்.

சுமாா் 86 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தேவுபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்களும், மத்திய மாவோயிஸ்ட் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்துள்ளன. இதுதவிர கூட்டணியைச் சோ்ந்த மற்ற கட்சிகளும் 14-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

5 இடங்களை வைத்திருக்கும் ஜனதா சமாஜ்வாதி கட்சி, மாதேசி கட்சியினா் தங்களுக்கு ஆதரவு தருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால் நாடாளுமன்றத்தில் தங்களது புதிய அரசுக்கு போதிய பலம் இருக்கும் என்று மத்திய மாவோயிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினா் கணேஷ் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com