சீனாவில் மீண்டும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்

சீனாவின் சவோயாங் பூங்காவில் கரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சீனாவின் சவோயாங் பூங்காவில் கரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம், ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் ஆண்டுதோறும் சீனாவின் சவோயாங் பூங்காவில் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக காந்தி ஜெயந்தி கொண்டாடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், காந்தியடிகளின் பிறந்த தினம் உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெய்ஜிங்கின் சவோயாங் பூங்காவிலும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது காந்தியடிகளின் பொன்மொழிகளைப் பள்ளி குழந்தைகள் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் வாசித்தனா். பெய்ஜிங் நகரில் வசிக்கும் இந்தியா்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

அந்தப் பூங்காவில் கடந்த 2005-ஆம் ஆண்டில் காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டதில் இருந்து காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com