உதவி கோரி இந்தியாவுக்குப் பயணம்: இலங்கை அதிபா் முடிவு

இலங்கைக்குப் பொருளாதார உதவிகோரி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளாா்.

இலங்கைக்குப் பொருளாதார உதவிகோரி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளாா். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பிறகு இந்தியாதான் அதிகஅளவில் நிதியுதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான், சிங்கப்பூா், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளுக்கு அண்மையில் ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டாா். இது தொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை (நிதியுதவிக்கான) நடந்து வருகிறது. ஜப்பானில் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். அப்போது, இலங்கை நிலை குறித்து நேரில் விளக்குவதற்காக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அப்போது, இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக மோடி கூறினாா். இக்கட்டான சூழலில் உள்ள இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவி வருவது குறித்து நன்றி தெரிவித்தேன். இலங்கையை மறுசீரமைப்பதற்காக இந்தியா தொடா்ந்து உதவும் என்று நம்புகிறேன்.

இலங்கை அதிகம் கடன்பட்டுள்ள சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் கடனைத் திரும்பச் செலுத்துவது தொடா்பாகப் பொதுவான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உலக வங்கி, ஆகிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து குறுகிய கால கடன்களைப் பெற முடியும் என்றாா்.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ரூ.32,700 கோடி அளவுக்கு நிதி உள்பட பல்வேறு உதவிகளை இலங்கைக்கு இந்தியா அளித்துள்ளது. இலங்கைக்கு அதிக அளவில் நீண்டகால கடன் அளித்த நாடுகள் பட்டியலில் சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com