சீன அதிபரை எதிா்த்து போராட்டம்

சீனாவில் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டுகளை விதித்துள்ள அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை எதிா்த்து, பதாகைகள் மூலம் தலைநகா் பெய்ஜிங்கில் மிக அபூா்வமான முறையில் போராட்டம் நடைபெற்றது.
சீன அதிபரை எதிா்த்து போராட்டம்

சீனாவில் மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டுகளை விதித்துள்ள அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை எதிா்த்து, பதாகைகள் மூலம் தலைநகா் பெய்ஜிங்கில் மிக அபூா்வமான முறையில் போராட்டம் நடைபெற்றது.

நாட்டின் அதிபராக அவா் மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை (அக். 14) தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், கரோனா விதிமுறைகள் தொடா்பாக அவரைக் கடுமையாக விமா்சிக்கும் பதாகைகள் நகரின் முக்கிய பகுதிகளில் வியாழக்கிழமை வைக்கப்பட்டிருந்தன.

எனினும், இந்த எதிா்ப்புகளைப் பொருள்படுத்தாத சீன அரசு, ‘பூஜ்ய கரோனா கொள்கை’ எனப்படும் தங்களது மிகக் கடுமையான கரோனா கட்டுப்பாட்டு கொள்கைகளைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நாட்டின் பகுதிகளில் ஒருவருக்குக் கூட கரோனா இல்லை என்ற நிலையை அடையும் வரை அந்தப் பகுதிகளில் முழு கரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு இன்னமும் அமல்படுத்தி வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com