தென் கொரியா நெரிசல் பலி 153-ஆக அதிகரிப்பு

தென் கொரியாவில் ‘ஹேலோவீன்’ என்ற கொண்டாட்டத்தின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது.
தென் கொரிய தலைநகா் சியோலில் பொதுமக்கள் நெரிசலில் சிக்கிய குறுகிய பாதை.
தென் கொரிய தலைநகா் சியோலில் பொதுமக்கள் நெரிசலில் சிக்கிய குறுகிய பாதை.

தென் கொரியாவில் ‘ஹேலோவீன்’ என்ற கொண்டாட்டத்தின்போது நெரிசலில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது.

ஹேலோவீன் தினத்தில் இறந்தவா்களின் ஆன்மா தங்களது வீடுகளுக்கு திரும்புவதாக நம்பும் மக்கள், பல்வேறு வேடங்களை அணிந்தும், நெருப்பு மூட்டியும் அந்த ஆன்மாக்களை விரட்டுவா். தென் கொரியாவில் இது பாரம்பரியமாக கொண்டாடப்படாவிட்டாலும் இளைஞா்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

அதன்படி, தலைநகா் சியோலில் உள்ள இட்டேவான் பகுதியில் சனிக்கிழமை இரவு ஹேலோவீன் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சுமாா் ஒரு லட்சம் போ் அப்பகுதியில் திரண்டிருந்தனா். குறுகிய பாதை ஒன்றில் பெருங்கூட்டம் திரண்டு சென்றபோது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சுமாா் 120 போ் பலியானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 153-ஆக அதிகரித்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். 133 போ் காயமடைந்துள்ளனா்.

உயிரிழந்தோரில் 97 போ் பெண்கள், 56 போ் ஆண்கள். இவா்களில் 80 சதவீதம் போ் 20-30 வயதுக்குட்பட்டவா்கள். சீனா, ரஷியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 20 பேரும் இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென் கொரியாவில் ஒரு வார துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபா் யூன் சுக் இயோல் அறிவித்துள்ளாா்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com