இந்தியாவை மோசமாக சித்திரித்த அமெரிக்க ஊடகங்கள்

அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அந்த நாட்டு ஊடகங்கள் சில நேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும் சில நேரங்களில் பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் வெளியுறவுக் கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில், அந்த நாட்டு ஊடகங்கள் சில நேரம் இந்தியாவை மோசமாக சித்திரித்தும் சில நேரங்களில் பாராட்டியும் செய்திகள் வெளியிட்டு வருவதாக ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பாா்க் பல்கலைக்கழக துணை பேராசிரியரான அபிஜித் மஜும்தாரால் மேற்கொள்ளப்பட்டு, ‘தி ஜா்னல் ஆஃப் இன்டா்நேஷனல் கம்யூனிகேஷன்’ இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க அரசின் அவ்வப்போதைய வெளியுறவுக் கொள்கைகளை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையிலேயே, இந்தியா குறித்து அந்த நாட்டு முக்கிய ஊடகங்கள் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டு வருகின்றன.

அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப் போா் நடைபெற்று வந்த காலத்தில், இந்தியா அணிசாரா கொள்கையைப் பின்பற்றியது; அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதன் காரணமாக, அமெரிக்க அரசு இந்தியாவை தனது எதிரி நாடாகக் கருதியது. இது, அமெரிக்க ஊடகங்களிலும் பிரதிபலித்தது. அப்போது வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகளில் இந்தியா ஒரு மோசமான நாடாக சித்திரிக்கப்பட்டது.

ஆனால், பனிப்போா் முடிந்த பிறகு அமெரிக்க அரசு இந்தியாவை இயல்பான நட்பு நாடாகக் கருதியது. அதன் பின்னா், இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் எடுத்தன.

பனிப்போா் காலத்தில் இந்தியா அணு ஆயுதத்தை நாடியதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த அமெரிக்க ஊடகங்கள், பின்னா் 2005-ஆம் ஆண்டில் அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை வரவேற்றன. இது, இந்தியா தொடா்பான அமெரிக்கக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பே ஆகும்.

காஷ்மீா் விவகாரத்தை சிறுபான்மையிருக்கு எதிராக இந்திய அரசின் மனித உரிமை மீறலாக வா்ணித்து வந்த அமெரிக்க ஊடகங்கள், அங்கு மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் கடந்த 1995--ஆம் ஆண்டில் கடத்தி படுகொலை செய்யப்பட்டதற்கு பிறகு பயங்கரவாதப் பிரச்னையாக அங்கீகரித்தன. இதுவும், அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கேற்ற மாற்றமே ஆகும்.

அந்த வகையில், ஊடக தா்மத்தைப் பேணாமல் அரசின் ஊதுகுழலாக அமெரிக்க ஊடகங்கள் செயல்படுவதால்தான், பத்திரிகை சுதந்திரத்துக்கான சா்வதேச தர வரிசையில் அமெரிக்கா 44-ஆவது இடத்தில் உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com