பேஸ்புக் நிறுவனர் பெயரில் இணைய நாணயங்கள்

உலகம் முழுவதும் உள்ள நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உலகளாவிய கிரிப்டோகரன்சி வெளியிடும் முயற்சியை மெட்டா நிறுவனம் நிறுத்தி கொண்டது.
பேஸ்புக் நிறுவனர்
பேஸ்புக் நிறுவனர்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் பெயரில் இணைய நாணயங்களை வெளியிட திட்டமிட்டுவருவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
  
உலகம் முழுவதும் உள்ள நிதி ஒழுங்குமுறை ஆணையங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உலகளாவிய கிரிப்டோகரன்சி வெளியிடும் முயற்சியை மெட்டா நிறுவனம் நிறுத்தி கொண்டது.

இருப்பினும், மெட்டாவெர்ஸ் என்ற இணைய உலகை படைக்க இ வர்த்தகம் மற்றும் நிதித்துறை தொடர்பான கருவிகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து மார்க் ஸக்கர்பெர்க் முன்பே கூறியிருந்தார். 

இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், "மக்கள், வணிகம் மற்றும் படைப்பாளர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் குறித்து தொடர்ந்து பரிசீலித்து வருகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் மெட்டாவேர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

அதில் பணம் செலுத்துதல் மற்றும் நிதிச் சேவைகள் எப்படி இருக்கும் என்பதும் அடங்கும்" என்றார். இருப்பினும், குறிப்பிட்ட புதிய கண்டுபிடிப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் கூற மறுத்துவிட்டார். 

விடியோ கேம்களில் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் டோக்கன்கள், இணைய நாணயமான 'ஸக் பக்ஸ்' உள்ளிட்டவற்றை மெட்டா பரிசீலித்து வருவதாக தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபோர்ட்நைட், ரோப்லாக்ஸ் போன்ற பிரபல விடியோ கேம்களில் இந்த டோக்கன்களே பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகிறது. விடியோ கேம்களை உருவாக்குபவர்கள், இணையத்தில் பதிவுகளை வெளியிட்டு கேம்களை நோக்கி கவனம் ஈர்க்க செய்பவர்களுக்கு இந்த டோக்கன் வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com