சா்வதேச அளவில் புதிய கரோனா பாதிப்பு, பலி சரிவு

சா்வதேச அளவில் புதிய கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சா்வதேச அளவில் புதிய கரோனா பாதிப்பு, பலி சரிவு

சா்வதேச அளவில் புதிய கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் கரோனா தொற்று கண்டறியப்படுவோா் மற்றும் அந்த நோய்க்கு பலியாவோரின் வாராந்திர எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 90 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய வாரத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையைவிட 16 சதவீதம் குறைவாகும்.

அதேபோல், கடந்த வாரத்தில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் கரோனாவுக்கு பலியாகினா். இந்த எண்ணிக்கை, முந்தைய வாரத்தைவிட குறைவாகும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட பரவலாகக் குறைந்துள்ளது.

இருந்தாலும், கரோனாவிடமிருந்து உலகம் விடுபட்டதாகக் கருத முடியாது. உலகின் பல்வேறு நாடுகள் தீவிர கரோனா பரிசோதனை திட்டத்தைக் கைவிட்டுவிட்டன. கரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் குறையும்போது பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையும் குறைவாகத்தான் பதிவு செய்யப்படும்.

அத்துடன், வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனாவின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ரகங்கள் முந்தைய ரகங்களைவிட 10 சதவீதம் அதிக தீவிரமாகப் பரவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, நாடுகள் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கைவிடாமல் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com