
அமெரிக்காவில் இந்திய வம்சாவளிகளான 2 சீக்கியர்கள் தாக்கப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ரிச்மண்ட் ஹில்ஸ் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்தியர்களான 2 சீக்கியர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பின் அவர்களிடம் கொள்ளை அடித்துச் சென்றதாகவும் அதில் ஒருவரைக் கைது செய்ததாகவும் ரிச்மண்ட் ஹில்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ‘கடந்த 10 நாள்களில் 2-வது முறையாக இதே இடத்தில் சீக்கியர்கள் தாக்கப்பட்டது அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. இந்திய தூதரகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சீக்கியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
2nd attack on 2 Sikhs within 10 days exactly at same location in Richmond Hill
— Manjinder Singh Sirsa (@mssirsa) April 12, 2022
Apparently, targeted hate attacks against Sikhs happening in continuation. We condemn this in strong words. These shd be investigated & perpetrators must be held accountable @IndiainNewYork @USAndIndia pic.twitter.com/Ld0RIxIeNn
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...