பிரிட்டன் கரோனா : நோய்த்தொற்றுடன் 505 நாள்கள் போராடிய நபா்

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா் 505 நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்துள்ளாா்.

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா் 505 நாள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்துள்ளாா். நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு உடைய அவா்தான் கரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் போராடியவா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

எனினும், அவரது பெயரையோ அவருக்கு எதன் காரணமாக நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு இருந்தது என்ற தகவலையோ அதிகாரிகள் வெளியிடவில்லை. பொதுவாக, எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நோய்கள் காரணமாக நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு ஏற்படும்.

இதற்கு முன்னா் 335 நாள்களாக ஒருவா் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்ததே மிக நீண்ட கால கரோனா தொற்றாக இருந்தது. ‘நிலைத்த கரோனா’ என்றழைக்கப்படும் இந்த வகை நோய்த்தொற்று மிகவும் அரிதானதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com