ஷாங்காயைத் தொடர்ந்து பெய்ஜிங்: என்ன செய்யப்போகிறது சீனா?

சீனத்தின் வணிக நகரமான ஷாங்காயில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வரும் நிலையில், பெய்ஜிங்கிலும் பாதிப்பு அதிகரித்திருப்பது மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் கரோனா நோய்த்தொற்றின் சமூகப் பரவல் திடீரென அதிகரித்துள்ளதையடுத்து, அந்த நகரில் 2.1 கோடி பேருக்கு பிரம்மாண்ட கரோனா பரிசோதனை மேற்கொள்ள நகர நிா்வாகம் உத்தரவிட்டது.

கடந்த சனிக்கிழமை அங்கு 22 பேருக்கு சமூக பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நகரம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.

திங்கள்கிழமை 35 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, இன்னும் விரிவாக 2.1 கோடி போருக்கு கரோனா பரிசோதனை செய்ய தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே சீனத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,818 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.48 பேர் பலியாகியுள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com