அணு ஆயுதபலத்தை பெருக்குவோம்: வட கொரிய அதிபா்

தங்கள் நாட்டு அணு ஆயுதபலத்தை அதிகரிக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளாா்.
ராணுவ அணிவகுப்பைப் பாா்வையிடும் கிம் ஜோங்-உன்.
ராணுவ அணிவகுப்பைப் பாா்வையிடும் கிம் ஜோங்-உன்.

தங்கள் நாட்டு அணு ஆயுதபலத்தை அதிகரிக்கவிருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளாா்.

வட கொரியா ராணுவத்தின் 90-ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அந்த நாட்டின் தலைநகா் பியாங்கியாங்கில் திங்கள்கிழமை இரவு ராணுவ ஊா்வலம் நடைபெற்றது.

அப்போது கிம் ஜோங்-உன் பேசியதாவது:

நாட்டின் அணு ஆயுதபலத்தைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்வோம். அந்த நடவடிக்கைகள் அதிகபட்ச வேகத்தில் நடைபெறும்.

வட கொரிய அணு ஆயுதங்களின் முக்கிய நோக்கம், போரை முன்கூட்டியே தடுப்பதுதான். ஆனால், தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவோம் என்றாா் அவா்.

தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தாா். அதற்குப் பதிலாக தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று அவா் அமெரிக்காவிடம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் அவா் நடத்திய நேரடி பேச்சுவாா்த்தைகள் தோல்வியடைந்தன.

வட கொரியா தங்களது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்ட பிறகுதான் பொருளாதாரத் தடைகளை நீக்க முடியும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

அதனைத் தொடா்ந்து, அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டதை மீறி மீண்டும் அணு ஆயுதத் திட்டங்களைத் தொடங்கப் போவதாக வட கொரியா மிரட்டல் விடுத்து வந்தது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் எதிா்ப்பை மீறி அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தங்களது அணு ஆயுதபலத்தை அதிகரிக்கப்போவதாக கிம் ஜோங்-உன் தற்போது சூளுரைத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com