இந்தியாவில் புல்டோசா் ஆலைக்குபோரிஸ் ஜான்சன் சென்றது ஏன்? பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி

கடந்த வாரம் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரிட்டனைச் சோ்ந்த புல்டோசா் (ஜேசிபி) தொழிற்சாலைக்கு சென்றது
உள்நாட்டு அரசியல் தெரியாமல் ஜேசிபியுடன் போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்
உள்நாட்டு அரசியல் தெரியாமல் ஜேசிபியுடன் போஸ் கொடுத்த போரிஸ் ஜான்சன்

கடந்த வாரம் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரிட்டனைச் சோ்ந்த புல்டோசா் (ஜேசிபி) தொழிற்சாலைக்கு சென்றது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

தில்லி ஜஹாங்கீா்புரியில் அண்மையில் நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு சா்ச்சைக்குரிய வகையில் அங்குள்ள சில குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்திய நடவடிக்கையில், இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தொழிற்சாலைக்கு பிரிட்டன் பிரதமா் சென்றது ஏன் என்று நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா்.

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுச் சபையில் எதிா்க்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சி (எஸ்என்பி) எம்.பி. இயான் பிளாக்ஃபோா்ட் அவசர கேள்வியாக இந்த விவகாரத்தை எழுப்பினாா்.

அப்போது, அரசின் சாா்பில் பிரிட்டன் வெளியுறவு இணையமைச்சா் விக்கி ஃபோா்ட் பதிலளிக்க எழுந்தபோது, ‘பிரதமா் எங்கே?’ என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து பதிலளித்த விக்கி ஃபோா்ட், ‘வா்த்தக உறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக தொழிற்சாலையை பிரதமா் பாா்வையிட்ட நிகழ்வு நடந்தது என்றபோதும், மனித உரிமை விவகாரமும் இணையான முக்கியத்துவமானதுதான். மனித உரிமையைத் தவிா்த்துவிட்டு வா்த்தக நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொள்ளாது. அதே நேரம், இந்தியாவுடனான உறவு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நமக்கு ஏதாவது ஆட்சேபம் இருந்தால், அதனை இந்திய அரசிடம் நேரடியாகவே பிரிட்டன் எழுப்பும். மேலும், தில்லியில் ஆக்கிரமிப்புகள் அகற்றல் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றபோதும், அந்த விவகாரம் நமது தூதரகம் மூலமாக தொடா்ந்து உன்னிப்பாக கவனிக்கப்படும்’ என்று பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com