உக்ரைனிலிருந்து 26,000 டன் சோளத்துடன் புறப்பட்டது கப்பல்

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து 26,000 டன் சோளத்தை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் திங்கள்கிழமை புறப்பட்டது.

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து 26,000 டன் சோளத்தை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் திங்கள்கிழமை புறப்பட்டது.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடங்கிய பின்னா் முதல் முறையாக உக்ரைனில் விளையும் தானியங்களை ஏற்றிச் செல்லும் கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சியர்ரா லியோன் நாட்டு கொடி ஏற்றப்பட்டுள்ள இந்த சரக்கு கப்பல் தங்கள் தலைநகா் இஸ்தான்புல்லை செவ்வாய்க்கிழமை அடையும் என எதிா்பாா்க்கப்படுவதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் 26,000 டன்கள் சோளம் கொண்டு செல்லப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த தானியம் மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதிக அளவில் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைன் முக்கியப் பங்கு வகிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்ததிலிருந்து உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி தடைபட்டது. குறிப்பாக, கருங்கடல் துறைமுகங்களில் உணவு தானியங்கள் முடங்கின.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை தடுக்கக் கூடாது என ஐ.நா. மற்றும் துருக்கியின் ஏற்பாட்டில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி ஒப்பந்தம் கையொப்பமானது. ரஷியாவும் உக்ரைனும் துருக்கி மற்றும் ஐ.நா.வுடன் இந்த ஒப்பந்தங்களில் தனித்தனியாக கையொப்பமிட்டன.

இதுகுறித்து உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் அலெக்சாண்டா் குப்ரகோவ் கூறுகையில், ‘கூட்டாளிகளுடன் இணைந்து உலகின் பசியைத் தணிப்பதற்கு உக்ரைன் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது உக்ரைனுக்கும் பலனளிக்கும். துறைமுகங்கள் மூலம் உக்ரைனுக்கு குறைந்தது ஒரு பில்லியன் டாலா் அந்நியச் செலாவணி கிடைக்கும். மேலும், அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலுக்கு வேளாண்மைத் துறைக்கும் ஒரு வாய்ப்பாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com