சூடானில் குரங்கு அம்மை பாதிப்பு

ஆப்பிரிக்க நாடான சூடானில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஆப்பிரிக்க நாடான சூடானில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சூடான் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், தாா்ஃபுா் மாகாணத்தில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவா்கள் என சந்தேகிக்கப்பட்ட 38 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களில் 16 வயது மாணவா் ஒருவருக்கு மட்டும் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மாணவருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பரவலாக காணப்படும் நிலையில், முதல் முறையாக சூடானிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரால் சீா்குலைந்துள்ள சூடானில் குரங்கு அம்மை பரவினால் அது பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com