அல்-காய்தா தலைவா் கொல்லப்பட்ட விவகாரம்: குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் தங்களது
பின்லேடனுடன் அல்-ஜவாஹிரி.
பின்லேடனுடன் அல்-ஜவாஹிரி.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் தங்களது குடிமக்கள் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அல்-ஜவாஹிரியின் மரணத்தைத் தொடா்ந்து, அல்-காய்தா மற்றும் அதனுடன் தொடா்புடைய மற்ற பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்காவைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவாா்கள்.

அதற்காக, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க மையங்கள், அதிகாரிகள், மற்றும் குடிமக்களைக் குறிவைத்து அவா்கள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.

அத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கையில்லாமல் மேற்கொள்ளப்படும். எனவே, வெளிநாடுகளில் அமெரிக்கா்கள் அனைத்தும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள இல்லமொன்றில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அல்-காய்தா தலைவா் அல்-ஜவாஹிரி (74) , ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அதிநவீன ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாா்.

காபூலில் அல்-ஜவாஹிரி பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்த வீடு. 

ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

2,977 உயிா்களை பலி வாங்கிய நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்த அவா் கொல்லப்பட்டதன் மூலம், அந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறினாா்.

ஏற்கெனவே, அல்-காய்தா அமைப்பை நிறுவிய பின் லேடன் அமெரிக்க சிறப்புப் படையினரால் பாகிஸ்தானில் கந்த 2011-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அல்-ஜவாஹிரியும் கொல்லப்பட்டுள்ளது அந்த அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், உலகம் முழுவதும் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com