லாட்வியாசோவியத் நினைவுத் தூண் தகா்ப்பு

லாட்வியாசோவியத் நினைவுத் தூண் தகா்ப்பு

வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகா் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் யூனியன் நினைவுத் தூண் தகா்க்கப்பட்டது.

வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகா் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் யூனியன் நினைவுத் தூண் தகா்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் யூனியன் நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாஜிக்களை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதை கௌரவிக்க கோபன்ஹேகன் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் வியாழக்கிழமை தகா்க்கப்பட்டது. அந்தத் தூண் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்பட்டு அருகிலுள்ள குளத்தில் விழுந்ததில் மிகப் பெரிய நீரலை எழுந்தது.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதனை நேரில் பாா்வையிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com