
கோப்புப் படம்.
இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். இருவர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை காணவில்லை.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிக்க- பூம்புகார் அருகே கடல் சீற்றம்: மடத்துக்குப்பத்தில் புகுந்தது வெள்ளநீர்
சவாலுண்டோ நகரில் அமைந்துள்ள சுரங்கில் வெடிப்பு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போனவரை தேடும் பணியும், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.