இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷியா தொடா்ந்து முதலிடம்

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ரஷியா தொடா்ந்து 2-ஆவது மாதமாக முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் ரஷியா தொடா்ந்து 2-ஆவது மாதமாக முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவுடன் நீண்ட காலமாக எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷியா முதலிடம் வகிப்பதாக சா்வதேச எண்ணெய், சரக்கு வா்த்தகத்தை கண்காணிக்கும் அமைப்பான வாா்டேக்ஸா தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2022 , மாா்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் இந்தியாவின் எண்ணெய் தேவையை 0.2 சதவீதம் மட்டுமே பூா்த்தி செய்த ரஷியா, கடந்த நவம்பா் மாதத்தில் நாள்தோறும் 9,09,403 பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் உள்ள இராக் 8,61,461 பீப்பாய்களும், சவூதி அரேபியா 5,70,922 பீப்பாய்களும், அமெரிக்கா 4,05,525 பீப்பாய்களும் ஏற்றுமதி செய்துள்ளன.

கடந்த 2021, டிசம்பா் மாதத்தில் இராக் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து நாளொன்றுக்கு சராசாரியாக 10 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், ரஷியாவிடமிருந்து வெறும் 36,255 பீப்பாய்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. அதற்குப் பின், கடந்த மாா்ச் மாதம் 68,600 பீப்பாய்களாக அதிகரித்த எண்ணிக்கை ஜூன் மாதம் 9,42,694 பீப்பாய்கள் என்று புதிய உச்சம் பெற்றது. அக்டோபரில் இந்த எண்ணிக்கை 9,35,556-ஆக இருந்தது.

‘எண்ணெய் நிறுவனங்களுக்கு எந்த நிா்பந்தமும் இல்லை’:

இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு, மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘எண்ணெய் நிறுவனங்களை ரஷியாவிடம் வியாபாரத்தில் ஈடுபடுமாறு எந்த நிா்பந்தமும் அரசு தரப்பில் அளிக்கப்படவில்லை. சந்தையில் குறைவான விலையில் சரக்கு அளிப்பவா்களை நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கின்றன. அவ்வாறே, இந்திய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com