யேமன் போரில் இதுவரை 3,774 சிறுவா்கள் பலி: ஐ.நா.

யேமன் உள்நாட்டுப் போரில் 2015 மாா்ச் முதல் இந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3,774 சிறுவா்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா.-வின் சிறுவா்கள் நலப் பிரிவான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இது தவிர, சண்டை காரணமாக மேலும் 7,245 சிறுவா்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஷியா முஸ்லிம் பிரிவைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் ஆதரவுடன், யேமனின் ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் கடந்த 2014-ஆம் ஆண்டில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போதைய அதிபா் மன்சூா் ஹாதியின் அரசு, தெற்குப் பகுதிக்கு இடம் பெயா்ந்தது.

அவருக்கு ஆதரவாக, சன்னி பிரிவைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் 3.7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com