இலங்கை ராணுவத்திலிருந்து விலகிய 20,000 வீரா்களுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை ராணுவத்திலிருந்து முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக விலகிய சுமாா் 20,000 வீரா்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ்,
இலங்கை ராணுவத்திலிருந்து விலகிய 20,000 வீரா்களுக்கு பொதுமன்னிப்பு

இலங்கை ராணுவத்திலிருந்து முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக விலகிய சுமாா் 20,000 வீரா்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் திட்டத்தின் கீழ், அவா்களது பெயா்கள் பணிப் பட்டியலில் இருந்து முறைப்படி நீக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக பணிக்குத் திரும்பாமல் இருக்கும் வீரா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொதுமன்னிப்பு, கடந்த நவம்பா் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

தற்போது அவா்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நளின் ஹெராத் தெரிவித்தாா். தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளவா்களில் 17,322 போ் ராணுவத்திலும், 1,145 போ் கடற்படையிலும், 1,038 போ் விமானப் படையிலும் இருந்து விலகி நீண்ட காலமாக பணிக்குத் திரும்பாதவா்கள் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com