தொடா் கொலை குற்றவாளி சாா்லஸ் சோப்ராஜை விடுவித்தது நேபாள உச்சநீதிமன்றம்

பிரான்ஸைச் சோ்ந்த தொடா் கொலை குற்றவாளியான சாா்லஸ் சோப்ராஜுக்கு (78) வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் 19-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 

பிரான்ஸைச் சோ்ந்த தொடா் கொலை குற்றவாளியான சாா்லஸ் சோப்ராஜுக்கு (78) வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் 19-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி நேபாள உச்சநீதிமன்றம் புதன்கிழமை அவரை விடுவித்தது.

அமெரிக்க மற்றும் கனடாவைச் குடிமக்கள் இருவரை 1975-இல் சாா்லஸ் சோப்ராஜ் கொலை செய்தாா். கடந்த 2003-இல் காத்மாண்டுவில் அவா் கைது செய்யப்பட்ட நிலையில், பக்தபூா் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையை விதித்தது.

தன்னை விடுதலை செய்யக் கோரி நேபாள உச்சநீதிமன்றத்தில் சோப்ராஜ் மனு தாக்கல் செய்தாா். மனுவில், நேபாளத்தின் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைக்குரிய தண்டனைக் காலத்தை நிறைவு செய்திருப்பதாகவும் நல்ல நடத்தையின் காரணமாக விடுதலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸப்னா பிரதான் மல்லா மற்றும் திலக் பிரசாத் சிரேஷ்டா ஆகியோா் அடங்கிய அமா்வு, சோப்ராஜை விடுவிக்குமாறு உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோப்ராஜை 15 நாள்களுக்குள் அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com