பெண்களுக்கு கட்டுப்பாடு: ஆப்கானிஸ்தானுக்கு உதவித் திட்டங்கள் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லவும், சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவித்துள்ளதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐ.நா கூறியுள்ளது. 
பெண்களுக்கு கட்டுப்பாடு: ஆப்கானிஸ்தானுக்கு உதவித் திட்டங்கள் நிறுத்தப்படுவதாக ஐ.நா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லவும், சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவித்துள்ளதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐ.நா கூறியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பெண்களும் சிறுமிகளும் கல்வி பயில தலிபான்கள் தடை விதித்திருப்பதற்கு உறுப்பு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அனைத்திலும் சரிசமமான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பயில பள்ளிகளை தலிபான் அரசு திறக்க வேண்டும். அவர்களின் கொள்கையை தீவிர மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது அவர்கள் எடுத்திருக்கும் கொள்கை முடிவு மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் அழிக்கும் செயலாகும்.

அத்துடன் அரசுசாரா அமைப்புகளில், சர்வதேச நிறுவனங்களில் அந்நாட்டு பெண் உதவிப் பணிபுரியவும் தலிபான் அரசு சனிக்கிழமை தடை விதித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து. மார்ச் மாதம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. இது அந்நாட்டில் மனித உரிமையின் மீது விளைவுகளை ஏற்படுத்தும். அந்நாட்டு மக்கள் பிற நாட்டு அமைப்புகளின் உதவி, சுகாதார உதவிகளைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலிபான் அரசின் இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணானது என்று இந்தியா உள்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தது

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்த சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா கூறியுள்ளது. 

மனிதாபிமான உதவிகள் லட்சக்கணக்கான ஆப்கானியர்களை சென்றடைந்துள்ள நான்கு முக்கிய திட்டங்கள், பெண் பணியாளர்கள் இல்லாமல் தங்கள் திட்டங்களை இயக்க முடியாததால், அந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் சில "முக்கியத்துவம் வாய்ந்த" சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாகவும், பெண்கள் உதவிப் பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால், பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல உதவிக் குழுக்களின் கூட்டு அறிக்கையில், பெண்கள் "உதவிப் பணிபுரியதில் பங்கேற்பது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல, அது தொடர வேண்டும்" என்றும், ஆப்கான் அதிகாரிகள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

"மனிதாபிமானப் பணிகளில் இருந்து பெண்களைத் தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே, பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால் சில நேரங்களில் முக்கியமான திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது."

"ஒரு மனிதாபிமான சமூகமாக இப்போது நாம் எதிர்கொள்ளும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நாங்கள் புறக்கணிக்க முடியாது," என்றும் கூறியுள்ளது. "நாங்கள் உயிர்காக்கும், நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர முயற்சிப்போம்... ஆனால் பெண் உதவிப் பணியாளர்கள் இல்லாமல் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை எங்களால் வழங்க முடியாது என்பதால், பல நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். 

 "எந்தவொரு நாடும் அதன் மக்கள்தொகையில் பாதியை சமூகத்திற்கு பங்களிப்பதில் இருந்து விலக்க முடியாது" என்று அகதிகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், "பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் சுதந்திரமான, கொள்கை ரீதியான, உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் உறுதியுடன் இருப்போம் என்று அவர்கள் உறுதியளித்தனர்".

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் பெரும்பாலும் பெண் கல்வியைத் தடை செய்தனர். ஆனால் அவர்களின் கொள்கைகள் மாறிவிட்டதாகக் கூறினர். தலிபான் தலைமையிலான நிர்வாகம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com