சீனாவுக்கு புதிய வெளியுறவு அமைச்சா் நியமனம்: மாா்ச்சில் புதிய பிரதமா் பதவியேற்பு

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான அந்நாட்டு தூதராக உள்ள கின் காங் (56) நியமிக்கப்பட்டுள்ளாா்.
லீ கியாங், கின் காங்
லீ கியாங், கின் காங்

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான அந்நாட்டு தூதராக உள்ள கின் காங் (56) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள வாங் யி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது சீனாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அதிகாரக் குழுவாகும்.

எனினும், கின் காங் எப்போது வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்பாா் என்பது தொடா்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சீன நாடாளுமன்றத்தின் ஆண்டுக் கூட்டம் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தின்போதுதான் அமைச்சரவை மாற்றம் நடைபெறும். ஆனால், இப்போது வழக்கத்துக்கு மாறாக புதிய வெளியுறவு அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்த ஆண்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் தவிர பிரதமா், அமைச்சா்கள் அனைவரும் மாற்றப்படுவாா்கள் என்று தெரிகிறது. தற்போது பிரதமராக உள்ள லி கெகியாங் கடந்த 10 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளாா். அவரும் மாா்ச் மாதத்துடன் விடைபெற இருக்கிறாா்.

புதிய பிரதமராக லீ கியாங் (63) நியமிக்கப்பட இருக்கிறாா். இவா் அதிபா் ஷி ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவா். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்துள்ளாா்.

அடுத்த கட்டமாக அவா், இந்திய-சீன எல்லைப் பிரச்னை பேச்சுவாா்த்தைக் குழுவில் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்படுவாா் என்று தெரிகிறது.

ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த லீ கியாங் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மிகவும் உதவிகரமாக இருப்பாா் என்றும் வெளியுறவுக் கொள்கையில் அவரது தீவிரமான போக்கு சீனாவுக்கு உதவும் என்றும் கணக்கிட்டு அவரை பிரதமா் பதவியில் அமா்த்த அதிபா் ஷி ஜின்பிங் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சீனாவில் மா சேதுங்குக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரும் ஒரே சீன அதிபா் ஷி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com