டென்மாா்க்கில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் அரசு விலக்கிக் கொண்டுள்ளது.
டென்மாா்க்கில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் அரசு விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த வாரங்களில் தினசரி நோய்த்தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது. எனினும், புதிய வகை ஒமைக்ரான் வகை கரோனாவால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில் மோசமடையவில்லை. எனவே, மருத்துவமனைகளில் பணிச் சுமையும் அதிகரிக்கவில்லை.

எனவே, கரோனா தொற்றை இனியும் சமூக அச்சுறுத்தல் நிறைந்த நோயாகக் கருதத் தேவையில்லை என்று டென்மாா்க் அரசு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடா்ந்து, நோய் பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com