நேபாளத்தில் வரலாறு காணாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

நேபாளத்தில் பெட்ரோலியப் பொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது, விற்பனையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நள்ளிரவு முதல் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.  
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

காத்மாண்டு: நேபாளத்தில் பெட்ரோலியப் பொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது, விற்பனையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நள்ளிரவு முதல் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.  

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதாக நேபாள ஆயில் கார்ப்பரேஷன் (என்ஓசி) அறிவித்துள்ளது. 

பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வை அடுத்து, நேபாளத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.142 ஆகவும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.125 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி நேபாள ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருள்களின் விலையை லிட்டருக்கு ரூ.140 உயர்த்தி அதன் பின்னர் குறைந்த வண்ணமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் "சர்வதேச சந்தையில் டாலர் மதிப்பு அதிகரித்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொட்ரோலிய பொருள்களின் விலையை நேபாள ஆயில் கார்ப்பரேஷன்  அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது," என்று அரசுக்கு சொந்தமான பெட்ரோலியத்தின் செய்தித் தொடர்பாளர் பினித்மணி உபாத்யாய் கூறியுள்ளார்.  

நேபாள ஆயில் கார்ப்பரேஷன் பதினைந்து நாள்களுக்கும் ஒரு முறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடமிருந்து திருத்தப்பட்ட விலையைப் பெற்று பின்னர் பெட்ரோலிய பொருள்களின் விலையில் மாற்றம் செய்து வருகிறது. 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கடைசியாக அனுப்பிய மாற்றம் செய்யப்பட்ட விலையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4.92 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.7.24 ஆகவும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.8.80 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று, விமான எரிபொருளின் விலையும் ரூ.7.48 ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்ந்தாலும், இன்னும் 15 நாள்களில் சுமார் 200 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படும் என்று நேபாள ஆயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. 

"அமெரிக்க டாலருக்கு எதிரான நேபாள நாணயம் மதிப்பு நலிவடைந்துள்ளதால், நஷ்டம் அதிகரித்துள்ளதால், பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. 2014 இல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.140 ஆக இருந்தபோது, ​​கச்சா எண்ணெய் பேரல் விலை 108 டாலராகவும், ஒரு டாலருக்கு எதிராக நேபாள ரூ.98 ஆகவும் இருந்தது," 

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 90 டாலராக உள்ளது, நேபாள ரூபாயுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.119.97 ஆக உள்ளது.

இது தவிர, அரசு விதித்துள்ள வரியாலும் பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. நேபாள ஆயில் கார்ப்பரேஷன் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84,32க்கு ஐஓசியிடம் இருந்து வாங்கப்படுகிறது, ஆனால் அதற்கு ரூ.58.48 வரி விதிக்கப்பட்டுகிறது.

அதேபோல், ஒரு லிட்டர் டீசல் ரூ.85.42க்கு வாங்கி, பின்னர் அதற்கு லிட்டருக்கு ரூ.41.16 வரி விதிக்கப்படுகிறது. அதன் பின்னர் மாநில விற்பனையாளர்கள் அதற்கு செயல்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் லாபம் சேர்த்து விற்பனை செய்யப்படுவதால் விலை மேலும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com