பாக்.: 1,800 ஆண்டு பழைமைவாய்ந்த பௌத்த கலைப் பொருள்கள் கண்டெடுப்பு

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 400-க்கும் மேற்பட்ட பௌத்த கலைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 400-க்கும் மேற்பட்ட பௌத்த கலைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அந்த மாகாண தொல்லியல் துறை இயக்குநா் அப்துஸ் சமத் கூறுகையில், ‘‘பாபு தேரி கிராம பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை பௌத்த சமயத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பராமரிப்பதற்கான அதிகாரபூா்வ பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அகழாய்வு நடைபெற்ற இடங்களை சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பல்வேறு தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பரில் பௌத்த சமயத்தைச் சோ்ந்த 2,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வழிபாட்டுத் தலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதுவே பாகிஸ்தானில் உள்ள பழைமைவாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com