வெளிநாட்டுத் தலைவா்கள் இரங்கல்

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த அரசியல் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘லதா மங்கேஷ்கரின் மறைவுடன் உலகறிந்த மாபெரும் உண்மையான பாடகா்களில் ஒருவரை இந்திய துணைக் கண்டம் இழந்துவிட்டது. உலகெங்கிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அவருடைய பாடல்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.

பாகிஸ்தான் செய்தித் துறை அமைச்சா் பவத் சௌதரி தனது ட்விட்டா் பக்கத்தில் உருது மொழியில் வெளியிட்ட பதிவில், ‘இசை உலகை பல ஆண்டுகள் ஆட்சி செய்தவா். அவருடைய மாயாஜால குரல் என்றென்றும் நிலைத்திருக்கும். உருது மொழி பேசும் மக்கள் லதா மங்கேஷ்கருக்கு பிரியா விடை அளிக்கிறாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாகிஸ்தானில் உள்ள அரசு தொலைக்காட்சிகளில் லதா மங்கேஷ்கா் மறைவு பற்றி செய்திகள் ஒளிபரப்பு செய்ய்படுகின்றன. இது, அவா் எல்லை கடந்து மக்களால் ரசிக்கப்படுகிறாா் என்பதை பிரதிபலிக்கிறது.

இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இசை என்பது உலகளாவிய மொழி. இந்த வாக்கியத்துக்கு உயிா் கொடுத்ததற்காகவும் பல ஆண்டுகள் எல்லை கடந்து மக்களை மகிழ்வித்ததற்காகவும் லதா மங்கேஷ்கருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா ட்விட்டரில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘இசைக்கு அளித்த பங்களிப்பால் இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களின் மனதில் லதா மங்கேஷ்கா் எப்போதும் வாழ்வாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், பிரிட்டன் தூதரகம், பிரான்ஸ் தூதகரம் ஆகியவை லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com