‘உக்ரைனை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்’: ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தினார் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஜோ பைடன்
ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தினார் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ரஷிய எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே சுமாா் 1 லட்சம் படையினரை ரஷியா குவித்துள்ளது. இதனால் அந்த நாடு உக்ரைனை ஆக்கிரமிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் ரஷியாவுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன் கூறியதாவது:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தவிருப்பதற்கான சாத்தியகூறுகள் இருக்கின்றன. ரஷியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது.

உக்ரைனை சுற்றியுள்ள தங்கள் நாட்டின் சில வீரர்களை திரும்பப் பெற ரஷியா அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், படை திரும்பப் பெறுவது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.

எங்களின் ஆய்வின்படி, ரஷிய படைகள் இன்னும் அச்சுறுத்தி வருகின்றன. உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லைப் பகுதிகளில் 1,50,000 ரஷிய வீரர்கள் சுற்றி வருகின்றனர்.

ரஷியாவுடன் நேரடியாக மோத அமெரிக்க விரும்பவில்லை என்றாலும், உக்ரைனிலுள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கட்டாயம் பதிலடி கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com