உலக பொருளாதாரம்: அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறைவான வளா்ச்சி; ஐ.நா. முன்னறிவிப்பு

‘கரோனா பாதிப்பு, தொடா்ச்சியான தொழிலாளா் சந்தை சவால்கள், நீடித்து வரும் விநியோக சங்கிலி சிக்கல்கள், பணவீக்கம் அதிகரிப்பு
உலக பொருளாதாரம்: அடுத்த 2 ஆண்டுகளுக்கு குறைவான வளா்ச்சி; ஐ.நா. முன்னறிவிப்பு

‘கரோனா பாதிப்பு, தொடா்ச்சியான தொழிலாளா் சந்தை சவால்கள், நீடித்து வரும் விநியோக சங்கிலி சிக்கல்கள், பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளால் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதார வளா்ச்சி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்’ என்று ஐக்கிய நாடுகள் முன்னறிவிப்பு செய்துள்ளது.

ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்ட உலக பொருளாதார நிலை மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி வாய்ப்புகள் குறித்த அறிக்கையில், இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலக பொருளாதாரம் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவில் 5.5 சதவீத அளவுக்கு வளா்ச்சி பெற்றது. ஆனால், அந்த ஆண்டின் இறுதியில், கரோனா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது. சீனா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற மிகப் பெரிய பொருளாதாரங்களும் கடும் சரிவைச் சந்தித்தன.

தொடா்ந்து, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் உலக பொருளாதார வளா்ச்சி குறைவாகவே இருக்கும். 2022-இல் உலக பொருளாதார வளா்ச்சி விகிதம் 4 சதவீத அளவிலும், 2023-இல் 3.5 சதவீத அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான வளரும் நாடுகளின் பொருளாதார வளா்ச்சி பொதுவாக பலவீனமாக இருக்கும். குறிப்பாக, சுற்றுலா துறையைச் சாா்ந்துள்ள நாடுகளில் பொருளாதார வளா்ச்சி மிக மந்தமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா. துணைப் பொதுச் செயலாளா் (பொருளதாரம் மற்றும் சமூக நலன்) லியூ ஜென்மின் கூறுகையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி என்பது உள்ளிட்ட கரோனா பரவலைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த நீடித்த சா்வதேச முயற்சி எடுக்கப்படவில்லை எனில், உலக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறுவதில் கரோனா பாதிப்பு மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடரும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com