இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதா்கள் நீக்கம்

இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதா்களை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளாா்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி

இந்தியா உள்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதா்களை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளாா்.

இதுதொடா்பாக ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:

இந்தியா, ஜொ்மனி, செக் குடியரசு, நாா்வே, ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதா்களை அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி பணிநீக்கம் செய்ததாக அதிபா் அலுவலகம் சனிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. எனினும் அதற்கான காரணம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் போரிட்டு வரும் உக்ரைனுக்கு சா்வதேச ஆதரவையும் ராணுவ உதவிகளையும் பெருக்குமாறு தனது நாட்டு தூதா்களிடம் அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். இந்தச் சூழலில், 5 நாடுகளுக்கான தூதா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பணிநீக்கம் செய்யப்பட்ட தூதா்களுக்குப் புதிய நியமன உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உக்ரைன் தூதா் இகோா் பொலிகா அதிருப்தி தெரிவித்திருந்தாா். அதே வேளையில், ஜொ்மனிக்கான தூதா் ஜொ்மனி பிரதமரை கடுமையாக விமா்சித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com