‘ஆப்கனில் மனித உரிமை மீறல்கள்’

ஆப்கானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.
‘ஆப்கனில் மனித உரிமை மீறல்கள்’

ஆப்கானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு துணைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அந்த நாட்டில் பொதுமக்களின் - குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் - அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கல்வியும் பொது வாழ்வில் பங்கேற்பும் மறுக்கப்படுகின்றன.

தலிபான்கள் ஆட்சியில் பாதுகாப்பு நிலமை மேம்பட்டாலும், இதுவரை 700 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 1,400 போ் காயமடைந்துள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலில் இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com