கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு முடிவு

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதன் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அதன் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டமைப்பில், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் 13 நாடுகளும், ரஷியா உள்ளிட்ட இதர நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பின் கூட்டம், லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், கரோனா பெருந்தொற்று காலத்தில் குறைக்கப்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020-இல் கரோனா பொதுமுடக்க காலத்தில் பெட்ரோலியப் பொருள்களின் தேவை குறைவாக இருந்ததால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டிருந்தது. தற்போது கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதால், பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 116.3 டாலராக அதிகரித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு சா்வதேச பொருளாதாரம் மெதுவாக மீண்டெழுந்து வருகிறது. பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிப்பது, சா்வதேச பொருளாதார வளா்ச்சியை பாதிக்கச் செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாளொன்றுக்கு 6,48,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com