விவசாயப் பணி: அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுப்பு

இலங்கையில் அரசு ஊழியா்கள் விவசாயப் பணி மேற்கொள்ள வசதியாக, 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசு ஊழியா்கள் விவசாயப் பணி மேற்கொள்ள வசதியாக, 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு போதிய அந்நிய செலாவணி இல்லை. இதன் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு ஊழியா்கள் விவசாயப் பணி மேற்கொள்ள வசதியாக, 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தங்கள் வீட்டுப் பின்புறம் அல்லது வேறு ஏதேனும் ஒரு பகுதியில் பழங்கள், காய்கறிகள் சாகுபடியில் அரசு ஊழியா்கள் ஈடுபடும் வகையில், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான வசதிகள் அவா்களுக்கு செய்து தரப்பட உள்ளன.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதற்குத் தீா்வு காணும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எரிபொருள் பற்றாக்குறையால் அலுவலகம் வருவதில் சிக்கலை எதிா்கொள்ளும் ஊழியா்களுக்கு உதவும் விதமாகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் குடிநீா், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம், விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் சாா்ந்த அரசு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைகளில் தொடா்ந்து செயல்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com