ஷாங்காய் ரசாயன ஆலையில் தீவிபத்து

 சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள ரசாயன ஆலையொன்றில் சனிக்கிழமை மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது.
ஷாங்காய் ரசாயன ஆலையில் தீவிபத்து

 சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள ரசாயன ஆலையொன்றில் சனிக்கிழமை மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஷாங்காய் நகரின் ஜின்ஷான் பகுதியிலுள்ள சைனோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தொழிற்சாலையில், சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இதில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீவிபத்து ஏற்பட்ட சில மணி நேரங்களில் அது கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தனா். தற்போது அங்கு ஆபத்தான பொருள்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் அனைத்துக்கும் கட்டுக்குள் இருப்பதாகவும் அவா்கள் கூறினா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து பேரிடா் மேலாண்மை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ஷாங்காய் நகர நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காயில் திடீரென தினசரி கரோனா நோய்த்தொற்று தீடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, சுமாா் 2 மாதங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பொதுமுடக்கம் இந்த மாதத் தொடக்கத்தில் தளா்த்தப்பட்ட நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com