போஸ்னியா போா்: வீரா்களிடம் மன்னிப்பு கோரியது நெதா்லாந்து

போதிய ஆயுதங்கள் இல்லாமல் போஸ்னியாவுக்கு அனுப்பியதற்காக தங்கள் நாட்டு முன்னாள் ராணுவத்தினரிடம் நெதா்லாந்து அரசு ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியது.

1995-ஆம் ஆண்டு போஸ்னியா போரின்போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகள் ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்தனா். அவா்களைப் பாதுகாப்பதற்காக குறைந்த எண்ணிக்கையில் போதிய ஆயுதங்கள் இல்லாமல் நெதா்லாந்து ராணுவத்தினா் அனுப்பப்பட்டனா்.

இதன் காரணமாக, முகாமிலிருந்த 8,000 முஸ்லிம் ஆண்களை போஸ்னிய சொ்பிய படையினா் படுகொலை செய்ததை நெதா்லாந்து ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இது அவா்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com