விண்ணில் பாய்ந்தது தென் கொரியா ராக்கெட்

உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை முதல்முறையாக தென் கொரியா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
விண்ணில் பாய்ந்தது தென் கொரியா ராக்கெட்

உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை முதல்முறையாக தென் கொரியா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முழுக்க முழுக்க தென் கொரியாவிலேயே உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் முதல்முறையாக செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3 நிலைகளில் இயங்கக் கூடிய ‘நூரி’ என்ற ந்த ராக்கெட் பூமியிலிருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாக செலுத்தியதாக அதிகாரிகள் கூறினா்.

இதன் மூலம், செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும் பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறனும் தங்களிடம் இருப்பதை தென் கொரியா நிரூபித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com