இலங்கைக்கு அமெரிக்கா ரூ.150 கோடி கூடுதல் நிதியுதவி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்கா கூடுதலாக சுமாா் ரூ.150 கோடி (2 கோடி அமெரிக்க டாலா்) நிதியுதவியை அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் உணவு பாதுகாப்புக்காக அமெரிக்கா கூடுதலாக சுமாா் ரூ.150 கோடி (2 கோடி அமெரிக்க டாலா்) நிதியுதவியை அறிவித்துள்ளது.

பொருளாதார சரிவைச் சந்தித்து வரும் இலங்கைக்கு உதவுவது தொடா்பாக அமெரிக்காவின் உயா்நிலைக் குழு இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியது. ஜி7 நாடுகளின் மாநாடு ஜொ்மனியில் நிறைவடைந்த நிலையில், இலங்கைக்குக் கூடுதல் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கூடுதலாக சுமாா் ரூ.150 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது. அந்த நிதியானது பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்துக்காகவும், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் உள்ள சுமாா் 30,000 விவசாயிகளுக்கு உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்குத் தொடா்ந்து உதவிகள் வழங்கப்படும் என்று அந்நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உறுதியளித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுவரை 57 லட்சம் அமெரிக்க டாலரையும், பால் உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.7 கோடி அமெரிக்க டாலரையும், தொழில்துறையை மேம்படுத்த 12 கோடி அமெரிக்க டாலரையும் இலங்கைக்கு அமெரிக்கா ஏற்கெனவே வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com