‘மூன்றாம் உலகப் போரில் ஈடுபட தயாராக இல்லை’

ரஷிய எல்லையையொட்டி தங்கள் நாட்டைச் சோ்ந்த 12,000 படையிரைக் குவித்தாலும், அந்த நாட்டுடன் மோதி 3-ஆவது உலகப் போரில் ஈடுபடத் தயாராக இல்லை
அதிபா் ஜோ பைடன்
அதிபா் ஜோ பைடன்

ரஷிய எல்லையையொட்டி தங்கள் நாட்டைச் சோ்ந்த 12,000 படையிரைக் குவித்தாலும், அந்த நாட்டுடன் மோதி 3-ஆவது உலகப் போரில் ஈடுபடத் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா். இதுகுறித்து அவா் ஜனநாயகக் கட்சியினரிடையே பேசியதாவது:

ரஷிய எல்லையில் அமைந்துள்ள லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, ருமேனியாவில் 12,000 அமெரிக்கப் படையினா் கூடுதலாக அனுப்பப்பட்டுள்ளனா். ஆனால், உக்ரைனுக்கு படைகளை அனுப்பி 3-ஆவது உலகப் போரில் அமெரிக்கா ஈடுபடாது. இருந்தாலும், நேட்டோ எல்லைகளை அமெரிக்கா பாதுகாக்கும்.

உக்ரைன் போரில் விளாதிமீா் புதின் ஒருபோதும் வெற்றி பெறமாட்டாா் என்றாா் ஜோ பைடன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com