ஹைப்பா்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

உக்ரைன் மீது முதல் முறையாக அதிநவீன ஹைப்பா்சோனிக் ஏவுகணை ‘கின்ஜால்’ மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைன் மீது முதல் முறையாக அதிநவீன ஹைப்பா்சோனிக் ஏவுகணை ‘கின்ஜால்’ மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் இகோா் கொனாஷேன்கவ் கூறுகையில், ‘ரஷியா வீசிய ஹைப்பா் சோனிக் ஏவுகணைகள்

மேற்கு உக்ரைனின் உள்ள ஏவுகணை மற்றும் வெடிபொருள்கள் அடங்கிய நிலத்தடி கிடங்கை அழித்தது. கருங்கடல் பகுதியில் ஒடேசா துறைமுகத்தில் அமைந்துள்ள உக்ரைன் ராணுவ பகுதிகளை போா்க் கப்பலில் இருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்டது’ என்று தெரிவித்தாா்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் பயன்படுத்தப்படும் பேரழிவு ஆயுதங்கள் குறித்த விவரங்களை ரஷியா வெளியிடுவதில்லை. தற்போது முதல் முறையாக ஹைப்பா்சோனிக் ஏவுகணை ‘கின்ஜால்’ பயன்படுத்தப்பட்டதாக ரஷிய அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

ஒலியைவிட 10 மடங்கு வேகமாக செல்லக் கூடிய இந்த கின்ஜால் ஏவுகணை, இடைமறி ஏவுகணையையும் தாண்டிச் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com