அமெரிக்க அறக்கட்டளை நன்கொடை வழங்க மத்திய அரசு தடை

இந்திய தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க முன்னணி அமெரிக்கத் தொண்டு நிறுவனமான ஹியூலெட் அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க முன்னணி அமெரிக்கத் தொண்டு நிறுவனமான ஹியூலெட் அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் மற்றும் நிா்வாகம் சாா்ந்தத் தளங்களில் இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஹியூலெட் அறக்கட்டளை நன்கொடை அளித்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு, அந்த அறக்கட்டளை 465 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.3,500 கோடி) நன்கொடை அளித்துள்ளது.

அந்த அறக்கட்டளை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘ஹியூலெட் அறக்கட்டளையிடம் இருந்து பெற்ற நன்கொடையை அந்நிய நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆா்ஏ) அனுமதியளிக்காதப் பணிகளுக்கு இந்திய தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து எஃப்சிஆா்ஏயின் பிஆா்சி பிரிவின் கீழ் ஹியூலெட் அறக்கட்டளை கொண்டு வரப்பட்டுள்ளது.

பிஆா்சி பிரிவின்படி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடையாளா் நிதியுதவி அளிக்க முடியாது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்திய தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஹியூலெட் அறக்கட்டளை நன்கொடை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் எஃப்சிஆா்ஏ பிரிவுகளின் விதிமுறைகளை மீறியதாக சுமாா் 1,900 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com