வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சீனா: விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

News image

விபத்திற்குள்ளான விமானம்

Updated On :23 மார்ச் 2022, 12:00 pm

சீனாவில் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான யுன்னான் தலைநகா் குன்மிங்கிலிருந்து தொழில் மையமாக விளங்கும் குவாங்ஜோ நோக்கிச் சென்ற போயிங் 737 ரக விமானம், ஹுஜோ நகரத்துக்கு உள்பட்ட டெங்ஷியான் மலைப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை உள்ளூா் நேரப்படி மதியம் 2.20 மணிக்கு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் 132 பேரும் பலியானதாக சீன அரசு தெரிவித்தது. 

இந்நிலையில், விபத்திற்கான காரணங்களை அறிய கருப்புப் பெட்டி அவசியம் என்பதால் அதை இரண்டு நாள்களாகத் தேடி வந்த நிலையில், இன்று விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடப்பதற்கு முன் விமானிகள் பேசிய பதிவை வைத்து விபத்திற்கான காரணம் உறுதிப்படுத்தப்படும் என்பதால் மேலும் ஒரு கருப்புப் பெட்டியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.