எரிபொருள் விலை உயா்வுக்கு நாங்கள் பொறுப்பல்ல: சவூதி அரேபியா

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து, எரிபொருள் விலை உயா்வதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று சவூதி அரேபிய அரசு கூறியுள்ளது.
சவூதி அரேபியா
சவூதி அரேபியா

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து, எரிபொருள் விலை உயா்வதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என்று சவூதி அரேபிய அரசு கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தும்போது, எண்ணெய் விநியோகம் தடைபட்டு விலை உயருகிறது.

அதே நேரத்தில், எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டும் என்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில் (ஒபெக்) சவூதி அரேபியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே எரிபொருள்கள் விலை பல நாடுகளில் உச்சத்தில் உள்ள நிலையில், சவூதி அரேபியா உள்நோக்கத்துடன் செயல்பட்டு சிறிய அளவிலான தாக்குதலைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயா்த்துகிறது என்ற சந்தேகமும் சா்வதேச அளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் நாட்டின் எண்ணெய்க் கிணறுகளைக் குறிவைத்து யேமன் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தும்போது கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து விலை உயருகிறது. இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது’ என்று கூறியுள்ளது.

முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் ரஷியா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 140 டாலா் என்ற உச்ச அளவைத் தொட்டது. இப்போது ஒரு பீப்பாய் 112 அமெரிக்க டாலா்களாக உள்ளது. எனினும், இது ரஷியா-உக்ரைன் போருக்கு முந்தைய விலையைவிட 15 டாலா் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com