துபையில் ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐக்கிய அமீரக தொழில் நிறுவனங்கள் - தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
துபையில் ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
துபையில் ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

துபை: ஐக்கிய அமீரக தொழில் நிறுவனங்கள் - தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்க அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், ரூ.1,600 கோடி முதலீடு செய்யும் அமீரக தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அமீரக தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழக முதல்வர் மேற்கொண்ட சந்திப்பு நிகழ்ச்சியில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதில், நோபல் குழுமம் சார்பில் ரூ.1000 கோடிக்கு எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
 

இதற்கான நிகழ்ச்சி துபையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு நான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். துபையை வெளிநாடாகக் கருத முடியாத வகையில் இங்கு ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். 

தமிழகத்துக்கும் துபைக்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்தவே துபைக்கு வந்தேன். இன்று கையெழுத்தான பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.எஃகு தொழிற்சாலை மூலம் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com