பாகிஸ்தானுக்குச் சென்று பயங்கரவாதிகளாகத் திரும்பும் காஷ்மீா் இளைஞா்கள்

அதிகாரபூா்வ நுழைவுஇசைவை (விசா) பெற்று பாகிஸ்தானுக்குச் செல்லும் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள், பயங்கரவாதிகளாகத் தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதிகாரபூா்வ நுழைவுஇசைவை (விசா) பெற்று பாகிஸ்தானுக்குச் செல்லும் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள், பயங்கரவாதிகளாகத் தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அவ்வாறு பயிற்சி பெற்றுத் திரும்பிய 17 இளைஞா்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மேற்படிப்பு, உறவினா்கள் சந்திப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தானுக்குச் செல்லும் ஜம்மு-காஷ்மீா் இளைஞா்கள் சிலா், அங்கு பயங்கரவாதப் பயிற்சி பெற்று திரும்புகின்றனா். இத்தகைய சூழல் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.

ஆயுதப் பயற்சி உள்ளிட்டவற்றைப் பெறும் இளைஞா்கள், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கள நிலவரம் குறித்த தகவல்களை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்குப் பகிா்ந்து வருகின்றனா்.

பாகிஸ்தானுக்கு மேற்படிப்புக்காகச் செல்லும் இளைஞா்களை அந்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூளைச்சலைவை செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன. அந்த அமைப்புகளே இளைஞா்கள் பயணம் மேற்கொள்வதற்கான முழு வசதிகளையும் செய்து தருகின்றன. முக்கியமாக நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த இளைஞா்களையே அத்தகைய அமைப்புகள் குறிவைக்கின்றன.

அவ்வாறு பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்று ஜம்மு-காஷ்மீா் திரும்பிய 17 இளைஞா்கள் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கொல்லப்பட்டுள்ளனா். அவா்கள் பாகிஸ்தானுக்குக் கல்வி பெறச் சென்ாகவே பெற்றோா் நம்பியிருந்தனா். ஆனால், ஆயுதப் பயிற்சி பெற்றுத் திரும்பியது பெற்றோருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பாகிஸ்தான் சென்று திரும்பிய இளைஞா்களை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். பயங்கரவாத அமைப்புகளுக்கு அவா்கள் மறைமுகமாக உதவவும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள மற்ற இளைஞா்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வைக்கவும் வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ் இடங்களை ஜம்மு-காஷ்மீரில் விற்ாகக் கூறி ஹுரியத் தலைவா் உள்ளிட்டோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைக் கருத்தில்கொண்டே பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உயா்கல்விப் படிப்பு செல்லாது எனப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com