அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு முதல் கருப்பின செய்தித் தொடா்பாளா்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் 35-ஆவது செய்தித் தொடா்பாளராக கரீனா ஜீன் பியேரை அதிபா் ஜோ பைடன் தோ்ந்தெடுத்துள்ளாா்.
அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு முதல் கருப்பின செய்தித் தொடா்பாளா்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் 35-ஆவது செய்தித் தொடா்பாளராக கரீனா ஜீன் பியேரை அதிபா் ஜோ பைடன் தோ்ந்தெடுத்துள்ளாா். 44 வயதாகும் ஜீன் பியோ்தான், மதிப்பு மிக்க அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கும் முதல் கருப்பின பெண் ஆவாா். அதுமட்டுமின்றி, தன்னை ஓரினச் சோ்க்கையளா் என்று அறிவித்துக்கொண்ட ஒருவா் வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளராவதும் இதுவே முதல்முறையாகும்.

தற்போது வெள்ளை மாளைகையின் முதன்மை துணை செய்தித் தொடா்பாளராக இருந்து வரும் ஜீன் பியோ், 2020-ஆம் ஆண்டு துணை அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸின் பிரசாரக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தாா்.

தற்போதைய செய்தித் தொடா்பாளா் ஜென் சாகியிடமிருந்து அந்தப் பொறுப்பை ஜீன் பியோ் வரும் 13-ஆம் தேதி ஏற்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com