"நான் மர்மமான முறையில் இறந்தால்" - எலான் மஸ்க் அதிர்ச்சி ட்வீட்

நான் மர்மமான முறையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் ட்விட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
எலான் மஸ்க்
எலான் மஸ்க்


நியூயாா்க்: நான் மர்மமான முறையில் இறந்தால், உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எலான் மஸ்க் ட்விட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்தது. 

அந்த வகையில் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான் மஸ்க், கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுமத்தில் சேருவதைத் தவித்தார். பின்னர் ஏப்ரல் 25 ஆம் தேதி அந்த நிறுவனத்தை 3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) வாங்கினார்.

இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் பதிவை பதிவிட்டுள்ளார். 

அதில், "நான் மர்மமான நிலையில் இறந்தால், உங்களை எல்லாம் அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

இப்படியொரு பதிவை பதிவிடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு, "உக்ரைனில் உள்ள பாசிசப் படைகளுக்கு ராணுவத் தகவல் தொடர்பு சாதனங்களை வழங்குவதில்" தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவையை பயன்படுத்தி உதவுவதில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

ரஷியா-உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு உதவியதற்காக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி ரஷியாவிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறாரா என்ற ஊகத்தை இந்த இரண்டு பதிவுகளும் தூண்டியுள்ளன. 

மர்மமான நிலையில் இறந்தால் என்ற எலான் மஸ்க் ட்வீட் பதிவுகள் நகைச்சுவை முதல் எச்சரிக்கை, ஒற்றுமை வரை பல்வேறு ஊக சிந்தனைகளை தூண்டியுள்ளது. 

எலான் மஸ்க் குடிபோதையில் இருக்கிறாரா என்று சில பயனர்கள் கேட்டுள்ளனர், சிலர் மிகப்பெரிய அசச்சுறுத்தல்கள் அவரைத் தொந்தரவு செய்கிறது, மேலும் சிலர் " உலகைச் சீர்திருத்துவதற்கு" எலான் மஸ்க் வாழ வேண்டும் என்றும், சிலர் நீங்கள் இறக்க மாட்டீர்கள் என்று தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வரும் எலான் மஸ்க், மைக்ரோ-பிளாக்கிங் தளத்திற்கான தீவிர யோசனைகள், வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு கட்டணத்தை அறிமுகப்படுத்துவது உள்பட அனைத்தும் கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com