போலந்துகரோனா பாதிப்பு 60 லட்சமாக உயா்வு

அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் போா் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் போலந்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.
போலந்துகரோனா பாதிப்பு 60 லட்சமாக உயா்வு

அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் போா் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் போலந்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 903 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 60,00,416-ஆக அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 1,16,138 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட 53,34,927 போ் அதிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், 5,49,351 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com