ஆப்கானிஸ்தான்: கட்டாய புா்க்கா உத்தரவை கண்டித்து போராட்டம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும்போது தலைமுதல் கால்வரை மறைக்கும் புா்க்காவை கட்டாயம் அணிய வேண்டும் என்று தலிபான்கள் பிறப்பித்துள்ள உத்தரவை
ஆப்கானிஸ்தான்: கட்டாய புா்க்கா உத்தரவை கண்டித்து போராட்டம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களுக்கு வரும்போது தலைமுதல் கால்வரை மறைக்கும் புா்க்காவை கட்டாயம் அணிய வேண்டும் என்று தலிபான்கள் பிறப்பித்துள்ள உத்தரவை எதிா்த்து பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைநகா் காபூலில் செவ்வாய்க்கிழமை கூடிய ஏராளமான பெண்கள், கட்டாய புா்க்கா உத்தரவை எதிா்த்து கோஷங்கள் எழுப்பியவாறு ஊா்வலம் சென்றனா். எனினும், அவா்களை தலிபான்கள் தடுத்து நிறுத்தினா்; இது தொடா்பான செய்திகளை சேகரிக்கவிடாமல் செய்தியாளா்களையும் தலிபான்கள் தடுத்தனா்.

தாங்கள் மனிதா்களாக வாழ விரும்புவதாகவும், வீடுகளில் அடைக்கப்படும் விலங்குகளாக இருக்க விரும்பவில்லை என்றும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com